நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் நிறுவனங்கள் ஈரானுக்கு உதவுகின்றன என்ற  அமெரிக்காவின் கூற்றுக்கு ஆதாரம் இல்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

உள்ளூர் நிறுவனங்கள் ஈரானுக்கு உதவுகின்றன என்ற அமெரிக்காவின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அல் ஜசிராவுக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலேசிய நிறுவனங்கள் சர்வதேச கடற்பகுதியில் கப்பல் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளன என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த  சந்தேகத்திற்கு அமெரிக்கா ஆதாரங்களை வழங்கவில்லை.

கடந்த டிசம்பரில் நான்கு மலேசிய நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச தடைகளை மலேசியா ஏற்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் தடைகளை ஐக்கிய நாடுகள் சபையால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

அமெரிக்காவிடம் ஆதாரம் இருந்தால், நிச்சயமாக அந்நிறுவனங்களை நிறுத்த வேண்டும்.

ஏனென்றால் மலேசியா சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset