நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசல் எரிப்பொருள் விற்பனையில் மோசடி: வர்த்தகருக்கு 300,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது

குவாந்தான்:

கடந்தாண்டு மார்ச் மாதம் 96,542 லிட்டர் டீசல் எரிபொருளை விற்பனையில் மோசடி செய்த வர்த்தகருக்கு குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 300,000 வெள்ளி அபராதம் விதித்தது. 

தனது எதிரான குற்றத்தை அந்த வர்த்தகர் ஒப்புக்கொண்டார். 

குற்றம் சாட்டப்பட்ட எங் சிங் ஹுவாங், 36, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மைமூனா எய்ட் முன் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் வாக்குமூலம் அளித்தார்.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் கட்டுப்படுத்தப்பட்ட டீசல் எரிப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி ஜெட்டி 2, லோரோங் இண்டஸ்ட்ரி தனா புட்டி பாரு, தனா புடி, குவாந்தானில் இக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

பகாங் மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் அதிகாரி ஷம்சுல் கஹார் அஹம்மத் நட்ஜிரி மற்றும் நூர் பைசுரா மசோரி ஆகியோரால் வழக்குத் தொடரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு 300,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராதத்தை செலுத்தத் தவறினால் 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset