நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

குமரியில் கொட்டி தீர்த்த மழை: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பின 

நாகர்கோவில்: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் மரணமடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை தவறிய நிலையில், கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக மழை அதிகரித்தது. 

இதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இடை விடாது இடி மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதிகபட்சமாக குருந்தன் கோட்டில் 134 மிமீ., மழை பெய்திருந்தது. நாகர்கோவிலில் 97 மிமீ., கொட்டாரத்தில் 82, அடையாமடையில் 75, மயிலாடியில் 74, கோழிப் போர்விளையில் 73, மாம்பழத்துறையாறு இரணியலில் தலா 72, ஆனைக்கிடங்கில் 70, பாலமோரில் 62, முள்ளங்கினாவிளையில் 61, பூதப்பாண்டியில் 60, தக்கலையில் 54,

குழித்துறையில் 45, குளச்சல் மற்றும் சிவலோகத்தில் 38, களியலில் 37, திற்பரப்பு மற்றும் சிற்றாறு ஒன்றில் 35, கன்னிமாரில் 30, பேச்சிப் பாறையில் 29, சுருளகோட்டில் 25 மிமீ மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரி மழை விகிதம் 53 மிமீ., ஆகும். குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச மழை விகிதம் இதுவாகும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset