நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலையம் பழையபடி களை கட்டுகிறது; இன்று 63 பயணிகள் விமானங்கள் பறக்கின்றன

சென்னை:

தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து, தமிழக அரசு தளர்வுகளை செய்து வருகிறது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்துக்குச் செல்லும் பயணிகளுடைய எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 63 விமான வருகை மற்றும் 63 புறப்பாடு என மொத்தம் 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 13,870 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

கடந்த ஊரடங்கு காலத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஒரு சில விமானங்களில் ஒற்றை இலக்கில் பயணிகள் பயணித்தனர். தற்போது அனைத்து விமானத்திலும் பயணிகள் முழு அளவில் பயணிக்கின்றனர்.

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இனி வரும் நாட்களில் பயணிகளுடைய வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் சென்னை விமான நிலையம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset