செய்திகள் மலேசியா
குறைந்த வருமானத்தில் உள்ளவர்களின் சுமையைக் குறைப்பதே எனது அரசுக்கான முன்னுரிமை: அன்வார் இப்ராஹிம்
புத்ராஜெயா:
மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் மீளாய்வு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற 2022 தேசிய வாழ்வாதார நடவடிக்கை மன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் பிரதமர் அன்வார்.
இலக்கிடப்பட்ட தரப்பினரை அந்த உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதில் எரிபொருள், மின்சார உதவித்தொகை ஆகியனவும் அடங்கும் என்றார் அவர்.
மக்களுக்கான மானியங்கள் குறித்து ஆய்வு செய்து விவாதிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் முகவர்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக குறைந்த வருமானத்தில் உள்ளவர்களின் சுமையைக் குறைப்பதே எனது அரசுக்கான முன்னுரிமை என்று அன்வார் கூறினார்.
இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மானியங்கள் குறித்து அனைத்து தரவுகளையும் தருவார்கள் என்று ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
தேசிய வாழ்வாதார நடவடிக்கை மன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜூகி அலி, பேங்க் நெகாரா மலேசிய கவர்னர் நோர் ஷம்சியா முஹம்மத் யூனுஸ், புள்ளியியல் துறை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம், விவசாயம் மற்றும் உணவுத் தொழில்கள் அமைச்சகம், எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
December 20, 2024, 4:27 pm
காணாமல் போன MH370 விமானம்: மீணடும் தேடும் முயற்சிக்கு அரசாங்கம் அனுமதி
December 20, 2024, 4:23 pm
பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அறிமுகம்: நோர் அஸ்மான் மாமுத்
December 20, 2024, 4:15 pm
படகு, ஃபெரி சேவை நடத்துனர்களுக்கு டீசலுக்கான மானியம் வழங்கப்படும் : அந்தோனி லோக்
December 20, 2024, 1:48 pm
பேராக் சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் 2024/2025 ஆம் ஆண்டின் நேர்த்தி நிறை விழா சிறப்பாக நடைபெற்றது
December 20, 2024, 1:01 pm
பேராக் பல்கலைக்கழக மாணவர் 3 நண்பர்களால் தாக்கப்பட்டார்: ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா
December 20, 2024, 12:38 pm
மருத்துவச் செலவுகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு அணுகுண்டாக மாறும்: ஆய்வாளர்கள்
December 20, 2024, 12:25 pm