நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்எச் 370 தேடல் பணி தொடர்வது குறித்து ஆகஸ்ட் மாதம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: அந்தோனி லோக்

சிரம்பான்: 

கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர ஓஷன் இன்பினிட்டியின் முன்மொழிவு அறிக்கை குறித்து வரும் ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அமைச்சரவைக்கு எடுத்துச் செல்வதற்கு முன் விரிவான முன்மொழிவு அறிக்கையை முதலில் தயார் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

இதுவரை, அமைச்சரவைக்கு முன்மொழிவு அறிக்கை கொண்டு வரப்படாததால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். 

முதலில், ஓஷன் இன்ஃபினிட்டியிடமிருந்து வரும் முன்மொழிவு அறிக்கைகாகத் தற்போது காத்திருப்பதாகவும் அந்தோனி லோக் குறிப்பிட்டார். 

முன்னதாக, காணாமல் போன எம்.எச் 370 விமானத்தைத் தேடுவதைத் தொடர ஓஷன் இன்பினிட்டியின் முன்மொழிவை அரசாங்கம் ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் இந்த ஆண்டு நவம்பரில் விமானத்தைத் தேடுதல் பணியைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தது. 

எவ்வாறாயினும், இந்த விவகாரம் பல செயல்முறைகளைக் கடந்து அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மலேசிய அரசுக்கும் ஓஷன் இன்ஃபினிட்டிக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை உருவாக்குவதுடன், வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பான கூடுதல் விவாதங்கள் உட்பட பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset