நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தலை புறக்கணிப்பதாக மஇகா மீது அவதூறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: தினாளன்

கோலாலம்பூர்:

கோல குபு பாரு தேர்தலை புறக்கணிப்பதாக கூறி மஇகா அவதூறு பரப்பும் தரப்பின மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் ஆர். தினாளன் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை மஇகா மௌனபமாக புறக்கணித்து வருகிறது என அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது.இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறப்பானது.

மஇகா இந்த இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை முழுமையாக ஆதரித்து வருகிறது.

அவ்வேட்பாளரின் வெற்றிக்காக கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் முதல் உறுப்பினர்கள் வரை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தாலும் முரண்பாட்டை விதைக்கும் அல்லது தவறான தகவல்களை பரப்பும் எந்த நடவடிக்கைகளை மஇகா ஏற்றுக் கொள்ளது.

கட்சி, அதன் தலைமைத்துவத்தின் நேர்மையை பாதிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பும் எந்தவொரு கட்சி அல்லது தனிநபருக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க கட்சிக்கு உரிமை உள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset