நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல்: 39,362 வாக்காளர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர் 

உலு சிலாங்கூர்; 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 39,362 பேர் வாக்களிக்கவுள்ளனர். 

18 வாக்கு மையங்களை உட்படுத்திய 74 இடங்களில் வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோலகுபு பாரு வாழ் மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவுள்ளனர். 

மலேசிய தேர்தல் ஆணைய தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 40,226 பதிவுப்பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அதில் 39,362 சாதாரண வாக்காளர்களாக உள்ளனர். 625 காவல்துறை  அதிகாரிகள், 238 ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் வாக்காளர் ஒருவர் 

இன்று மே 10ஆம் தேதி கோலகுபு பாரு தேர்தல் பரப்புரையின் இறுதி நாளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோலகுபு பாருவில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கை கூட்டணி வேட்பாளராக PANG SOCK TAO, தேசிய கூட்டணி சார்பாக KHAIRUL ANUAR SAUD, PRM கட்சி சார்பாக HAFIZAH ZAINUDDIN மற்றும் சுயேட்சை வேட்பாளராக NYAU KE XIN ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset