நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிரணியின் மேடையில் பேசிய பிறகு பெர்சத்து உறுப்பினராக இருப்பது நியாயமற்றது: மொஹைதின்

கோல குபு பாரு: 

எதிரணியின் மேடையில் பேசிய பிறகு  பெர்சத்து கட்சியின் உறுப்பினராக இருப்பது நியாயமற்றது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ மொயின் இதனை தெரிவித்தார்.கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சாங்கள் தற்போது நடந்து வருகிறது.

இதில் செலாட் கிளாங் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷிட் அஸாரி நம்பிக்கைக் கூட்டணியின் பிரச்சார மேடையில் தோன்றியுள்ளார்.

எதிரணியின் மேடையில் தோன்றிய பிறகு இன்னும் பெர்சத்து கட்சியின் உறுப்பிராக இருப்பது நியாயமற்றது.

அவர் மேடையில் அமர்ந்து, சொந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் பேசுவது உண்மைதான்.மேலும் மீண்டும் எங்களை ஆதரிப்பீரா என்பது சந்தேகம் தான்.

கட்சி சட்டப்படி அவர் அப்படிச் செய்த பிறகு அவரது உறுப்பினர் சேர்க்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று மொஹைதின் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset