நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சக நண்பர் மீது ஆசிட் வீச்சு : கீர்த்தனா மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு: 

தமது நண்பர் மீது ஆசீட் வீசி காயத்தை ஏற்படுத்தியது உட்பட இரு குற்றங்களுக்காக இன்று கோத்தாபாரு செக்‌ஷன் நீதிமன்றத்தில் ஓர் இந்திய மாணவி முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட 22 வயதான ஆர் கீர்த்தனா நாயூடு நீதிபதி Nik Habri Muhamad முன்னிலையில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

22 வயதான நூருல் ஹுஸ்னா ரஹீமுக்கு ஆசீட் எரிபொருளைப் பயன்படுத்தி வேண்டுமென்றே பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக முதல் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் (கேகே) பிரிவு 326 இன் கீழ் கீர்த்தனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதோடு அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.

சல்பூரிக் வகை ஆசீட் வைத்திருந்ததாக கீர்த்தனா மீது இரண்டாவது குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.  

வெடிக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் (ABKLSB) 1958 இன் பிரிவு 3 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறைத்தண்டனை மற்றும் தடியடியும் விதிக்கப்படலாம்.

மே 3ஆம் தேதி கோத்தா பாரு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 4.23 மணியளவில் கீர்த்தனா இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

கீர்த்தனா பல்கலைக்கழக மாணவி என்ற காரணத்திற்காகப் பாதிக்கப்பட்டவருக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் 20 ஆயிரம் ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

அதோடு இந்த வழக்கு முடியும்வரை ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் கீர்த்தனா தம்மை முன்னிலைப்படுத்த வேண்டுமென நீதிபதி கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 9-ஆம் தேதியை அவர் நிர்ணயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset