நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலமும் சிவப்பும் இணைந்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது: மஇகா இளைஞர் பிரிவு

\உலுசிலாங்கூர்:

அரசியலில் நீலமும் சிவப்பும் ஒன்றாக இணைந்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மஇகா இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் அன்ட்ரூ டேவிட் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தல் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் பாங் சோக் தாவின் வெற்றிக்காக தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி கட்சியினர் ஒன்றாக இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் எதிரியாக இருந்த தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் இப்போது ஒன்றாக இணைந்துள்ளது மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக இந்திய சமூகம் ஒரு குடையின் கீழ் இணைந்துள்ளதை எண்ணி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த பொய்யான செய்திகளை எல்லாம் மக்கள் நம்பக் கூடாது.

அதே வேளையில் வரும் சனிக்கிழமை அனைத்து வாக்காளர்களும் வெளியே சென்று வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பது நமது உரிமை ஆகும். அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அன்ட்ரூ டேவிட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset