நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துறைமுகத்தில் இருந்த கப்பல் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல: அந்தோனி லோக் 

புத்ராஜெயா:

இஸ்ரேலிய நிறுவனத்திற்கு சொந்தமானது என்று கூறி நாட்டின் துறைமுகத்தைப் பயன்படுத்தியது ஹாங்காங்கை தளமாகக் கொண்ட மற்றொரு நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்ட கப்பல் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று விளக்கினார்.

இது குறித்து தனது தரப்பு விசாரணையை மேற்கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட கப்பல் முன்பு ஜிம் ரோட்டர்டாமின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது கப்பல் இப்போது எம்வி ரோட்டர்டாம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் கப்பலின் உரிமை ஜிம் ரோட்டர்டாம் அல்ல, ஆனால் கோல்ட்ஸ்டார் லைன் நிறுவனத்தின் கீழுள்ளது.

ஜிம் ரோட்டர்டாம் ஷிப்பிங் நிறுவனம் தனது கப்பல்களை மலேசிய துறைமுகத்தில் தரையிறக்க அனுமதியில்லை. 

தற்போது கப்பல் கை மாறி வேறு நிறுவனத்திற்குச் சொந்தமானது. அதனால் வர்த்தக நாடு என்பதால் அவர்கள் உள்நாட்டு துறைமுகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். 

முன்னதாக, இஸ்ரேலிய நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்குக் கப்பல் கடந்த வாரம் மலேசியாவிலிருந்து புறப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

மலேசியாவில் நங்கூரமிடப்பட்டுள்ள இஸ்ரேலியக் கொடியைப் பயன்படுத்தும் கப்பல்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொள்வதில்லை என்று டிசம்பர் 20 அன்று மலேசிய அரசு முடிவு செய்தது.

அதே நேரத்தில், மலேசியத் துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்ல இஸ்ரேலுக்குச் செல்லும் எந்தக் கப்பலுக்கும் அரசாங்கம் தடை விதித்ததாகவும் அன்வார் கூறியதாகக் கூறப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset