நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண  பிரதமருக்கு கால அவகாசம் வழங்குங்கள்: சார்லஸ் - குணராஜ் வேண்டுகோள் 

பெட்டாலிங ஜெயா:

இந்திய சமுதாயத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குங்கள்.

கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருபோதும் இந்திய சமூகத்தை கைவிடமாட்டார்.

அவர் பிரதமராக பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. முதலில் அவர் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவோம்.

இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் கண்டிப்பாக இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் நல்ல முறையில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மடானி அரசாங்கத்தை பலர் கடுமையாக குறை கூறி வருகின்றனர்.

குறைகளை நல்ல முறையில் சுட்டி காட்டுங்கள். அதை விடுத்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது பெரும் வேதனையை அளிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் நேரடியாகவே இந்திய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆகவே சற்று கால அவகாசம் வழங்குங்கள். கண்டிப்பாக இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு பிறக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் நேரடியாக தலையிட்டதால் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஐந்து தோட்டங்களை சேர்ந்த பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கிடைக்க வழி பிறந்தது .

இந்தியர்களின் தொழில் திறன் கல்விக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 3 கோடி வெள்ளியை ஒதுக்கி உள்ளார்.

மித்ராவுக்கு 10 கோடி, தெங்குனுக்கு 3 கோடி, தமிழ்ப்பள்ளிகளுக்கு கோடிக் கணக்கான வெள்ளி மானியத்தை மடானி அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கி உள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

ஆகவே இந்திய சமூகம் எந்த வகையிலும் கைவிடப்படாது  என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset