நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல் குபு பாருவில் மின்சுடலை நிர்மாணிக்கப்படும்: சுற்றுலா அமைச்சர் தியோங் அறிவிப்பு

உலுசிலாங்கூர்:

மக்கள் பயன்பெறும் வகையில் கோல குபு பாருவில் மின்சுடலை விரைவில் நிர்மாணிக்கப்படும்.

அதற்கான முழு செலவையும் நிர்வானா ஏற்றுக் கொள்ளும் என்று சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் அறிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இங்கு வந்திருந்தேன்.

அப்போது கோல குபு பாரு மக்கள் 20 ஆண்டுகளாக இங்கு மின்சுடலையை நிர்மாணிக்க வேண்டும் என போராடி வருவது எனக்கு தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஒரு சில பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கோல குபு பாருவில் மின்சுடலையை நிர்மாணிக்க நிர்வானா முன்வந்துள்ளது.

அதற்கான செலவுகளையும் நிர்வானா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மின்சுடலை நிச்சயம் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று அவர் கூறினார்.

தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்டால் இதை தேர்தல் வாக்குறுதி என யாரும் நினைத்து விடக் கூடாது.

மக்களுக்கு பயனளிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பது மடானி அரசாங்கத்தின் இலக்காகும். அதன் அடிப்படையில் தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோல குபு பாருவில் உள்ள அகாடமி பிஎஸ் சாமியில் நடந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் இதனை கூறினார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு, உலுசிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ், டத்தோ பிஎஸ் சாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset