நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனக்கெதிரான விசாரணையை மறுஆய்வு கோரும் முயற்சியில் டைய்ம் தோல்வி 

புத்ராஜெயா: 

முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுடின் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நிதி விவகாரங்கள் மீதான மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம், எம்ஏசிசி-யின் விசாரணையை நீதித்துறை மறுஆய்வு கோரும் முயற்சியில் மீண்டும் தோல்வியடைந்துள்ளனர்.

பல சொகுசு வாகனங்கள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை அறிவிக்காமல் நோட்டிஸுக்கு இணங்கத் தவறிய வழக்கை மற்றொரு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரிக்க வேண்டும் என்று டைய்ம் விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது

குற்றவியல் விசாரணையை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியாது என்று நீதிபதி அசிசா நவாவி தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதி குழு இம்முடிவை அறிவித்துள்ளது.  

இந்த மேல்முறையீட்டு மனுவை ஹக்கீம் ஹாசிம் ஹம்சா மற்றும் அஜிசுல் அஸ்மி அட்னான் ஆகியோர் விசாரித்தனர்.

இன்று நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் வழக்கு குறிப்பிடப்பட்ட போது பிரதி அரசு வழக்கறிஞர் சின் ஹவ் இதனைத் தெரிவித்தார்.

டைய்ம் கோலாலம்பூர், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலானைச் சுற்றியுள்ள பல சொகுசு வாகனங்கள், நிறுவனங்கள்  உள்ளிட்ட சொத்துக்களை அறிவிக்காமல் நோட்டீசுக்கு இணங்கத் தவறிய குற்றச்சாட்டைக் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி எதிர்நோக்கினார். 

66 வயதான நயிமா, மெனாரா இல்ஹாம் உள்ளிட்ட சொத்துக்கள், கோலாலம்பூர் மற்றும் பினாங்கைச் சுற்றியுள்ள பல சொத்துக்களை அறிவிக்காமல் நோட்டீசுக்கு இணங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் ஜனவரி 23-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டார்.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையச் சட்டம் 2009 இன் பிரிவு 36(2) இன் படி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக RM100,000 அபராதம் விதிக்கப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset