நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகேபி இடைத்தேர்தலின் பாதுகாப்பை தேசிய காவல்படை உறுதி செய்யும்: உள்துறை அமைச்சர் 

உலு சிலாங்கூர்: 

கோல குபு பாரு இடைத்தேர்தலின் வாக்கு பதிவு நாள் வரை அங்கு பொது பாதுகாப்பை தேசிய காவல்படை உறுதி செய்யும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தேசிய காவல்படை தலைவர், டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தாம் கலந்துரையாடி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கேகேபி-யில் தற்போது காவல்துறை ஏற்கனவே நியாயமான மற்றும் போதுமானதாகக் கருதப்படும் படைகளை நிலைநிறுத்தியுள்ளது.

தற்போது பிரச்சாரம் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்குப் புகார்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்த முறை இடைத்தேர்தல் காலம் முழுவதும் பொதுமக்களுக்கு தனது தரப்பு பாதுகாப்பு உறுதிமொழியை வழங்கியதாக சைபுதீன் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஏப்ரல் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து இதுவரை காவல்துறைக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் எந்த அறிக்கையும் வரவில்லை என்றார் அவர். 

இது தொடர் கண்காணிப்பின் விளைவு. இந்த காவல் துறையின் அர்ப்பணிப்பு வாக்குப்பதிவு நாள் வரை நான்கு நாட்களும் தொடரும் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset