நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கால்பந்து வீரர்களின் உயிரும் பாதுகாப்பும் தான் மிக முக்கியம்: சிலாங்கூர் சுல்தான்

ஷா ஆலம்: 

நாளை நடைபெறவிருக்கும் 2024-ஆம் ஆண்டுக்கான சும்பங்சிஹ் கிண்ணப் போட்டியில் ஜேடிதி-க்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ளாத சிலாங்கூர் எஃப்சி அணியின் முடிவை முழுமையாக ஆதரிப்பதாக சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் தெரிவித்தார். 

சிலாங்கூர் எஃப்சியின் ஆலோசகர் என்ற முறையில், சமீபத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பல உயிருக்கு ஆபத்தான சம்பவங்களைத் தொடர்ந்து, சிலாங்கூர் எஃப்சி அணி போட்டியில் பங்கேற்காதது பொருத்தமானது என்று தாம் கருதுவதாக அவர் கூறினார். 

இந்த நேரத்தில் கால்பந்து வீரர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதே முக்கியம். தற்போது கிண்ணத்தை வெல்வதற்கு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

ஃபைசால் ஹலீம் சம்பந்தப்பட்ட அமிலம் வீச்சு சம்பவத்தால் இன்னும் கலக்கமடைந்து பாதிக்கப்பட்ட அணியின் மன உறுதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சிலாங்கூர் எஃப்சியின் போட்டியை ஒத்திவைக்கும் கோரிக்கையை மலேசிய கால்பந்து லீக் நிராகரித்ததற்கு மாட்சிமையும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset