நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்களிக்க வேண்டாம் என்பவர்கள் சனிக்கிழமையோடு  காணாமல் போய்விடுவார்கள்: டாக்டர் சத்தியபிரகாஷ்

உலுசிலாங்கூர்:

தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்பவர்கள் சனிக்கிழமையோடு காணாமல் போய்விடுவார்கள்

இந்திய மக்கள் இதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று உலுசிலாங்கூர் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க ஒரு சில தரப்பினரால் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த தேர்தலில் கெஅடிலான் கட்சி முறையாக பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுக்காக எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை எந்தவொரு உண்மையும் இல்லை.

காரணம் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இதை யாராலும் மறுக்க முடியாது. அதேவேளையில் இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என்று அவர் கூறினார்.

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சில தரப்பினர் கூறி வருகின்றனர்.

அப்படி சொல்பவர்கள் வரும் சனிக்கிழமையோடு காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால் தங்களுக்கென ஒரு சிறந்த பிரதிநிதி இல்லை என்றால் இங்குள்ள மக்கள் தான் சிரமப்படுவார்கள்.

இதை அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று டாக்டர் சத்யபிரகாஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset