நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களின் அடையாள ஆவணம் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் மடானி அரசு தீர்வு காணும்: சைபுடின்

உலுசிலாங்கூர்:

இந்தியர்களின் அடையாள ஆவணம் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் மடானி அரசு தீர்வு காணும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

சிலாங்கூர், உலு சிலாங்கூர் இந்திய தலைவர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட அனைத்து சமூகங்களின் நலனை காக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இருந்தாலும் அவருக்கு போதுமான கால அவகாசங்கள் தேவைப்படுகிறது. இது பலருக்கு அதிருப்தி ஏற்படுத்துகிறது.

இதனால் தான் பிரதமர் இந்திய சமூகத்தை ஓரம் கட்டி விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எழுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் செவி சாய்த்தது இல்லை.

காரணம் இந்திய உட்பட அனைத்து சமூகங்களின் நலனிலும் பிரதமர் அக்கறை செலுத்தி வருகிறார் என்றார் அவர். 

நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின் மக்களிடையே நிலவும் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளேன்.

இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான மக்கள் இந்தியர்கள் ஆவர். இப்படி இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு மடானி அரசு ஒரு தீர்வை வழங்கி வருகிறது.

குறிப்பாக மக்களின் நலன், நாட்டின் மேம்பாடு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் பாங் சோக் தாவிற்கு இங்குள்ள மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும்.

அரசாங்க பிரதிநிதி வேட்பாளரால் மட்டுமே இங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியும்.

இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset