நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

24 மணி நேர உணவக உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை  பிரெஸ்மா நிராகரிக்கிறது: டத்தோ ஜவஹர் அலி

கோலாலம்பூர்:

24 மணி நேர உணவகங்களுக்கான உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை  பிரெஸ்மா நிராகரிக்கிறது.

அதன் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை தெரிவித்தார்.

உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 24 மணி நேரம் இயங்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

இதனால் எடை அதிகரிப்பு, தூக்கக் கலக்கம், செரிமானம் உட்பட இரவு நேர உணவுப் பழக்கத்தால் எதிர்மறையான விளைவுகள் இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறியிருந்தது.

இது குறித்து பேசிய ஜவஹர் அலி, சமூகத்தின் தேவைகள், இருப்பிடம், வாழ்க்கை முறைக்கு ஏற்ப மட்டுமே இந்த பரிந்துரை பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் உணவகம், அது  தொடர்புடைய தொழில்கள் அது அனைத்து தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.

நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்களின் வணிகச் செயல்பாட்டின் அடிப்படையில் 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்குமாறு பிரஸ்மா அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

24 மணி நேர உணவகங்களின் செயல்பாடு மலேசியர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் அல்ல.

இதை நாங்கள் திட்டவட்டமாக வலியுறுத்த விரும்புகிறோம்.

மேலும் இது தனிநபர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகள் போன்ற பிற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset