நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், மஹிமாவின் திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு

கோலாலம்பூர்:

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானமும், மஹிமாவும் இணைந்து திருவிளங்கு சைவத் திருமுறை மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

இம்மாநாடு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை கோலாலம்பூர் பங்குனான் மகா மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறும் என்று தேவஸ்தானத்தில் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா கூறினார்.

இம்மாநாட்டை முன்னிட்டு ஏப்ரல் 27ஆம் தேதி ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தேவாரப் போட்டி நடைபெறவுள்ளது.

டிஎஸ்கே குழுமத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இப்போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

முதல் பிரிவு 7 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்காக நடைபெறும். 

இப் பிரிவில் வெற்றி பெறும் முதல் போட்டியாளருக்கு 700 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும்.

இரண்டாவது நிலை வெற்றியாளருக்கு 400 ரிங்கிட்டும் மூன்றாவது வெற்றியாளருக்கு 200 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் பிரிவு 16 வயதுக்கு மேற்பட்ட பிரிவாக நடத்தப்படவுள்ளது.

இப் பிரிவில் வெற்றி பெறும் முதல் போட்டியாளருக்கு 1,000 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும்.

இரண்டாவது நிலைக்கு 500 ரிங்கிட்டும் மூன்றாவது நிலைக்கு 300 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இப் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நாளைக்குள்    பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மாநாட்டில் சனிக்கிழமை இன்னிசைக் கச்சேரி, ஆன்மீக சொற்பொழிவு, தேவாரப் பண்ணிசை என பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் கலந்துக் கொண்டு உரையாற்றவுள்ளார்.

மேலும் தேவஸ்தான சேவதாரிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்படும்.

ஆகவே மக்கள் திரளாக வந்து இம்மாநாட்டில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று டான்ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset