நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இதுவரை மலேசியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்துகளும் சிறப்புகளும்  

கோலாலம்பூர்:

நவம்பர் 14, 1989: ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (ஆர்எம்ஏஎஃப்) சிகோர்ஸ்கி எஸ்-61 ஏ-4 (நூரி) ஹெலிகாப்டர் கிளந்தான் - பேராக் எல்லையான குனுங் கெராவில் விபத்துக்குள்ளானதில் 21 பேர் இறந்தனர்.

நவம்பர் 29, 1995: பெல் 412 எஸ்பி ஹெலிகாப்டர் சபாவில் உள்ள லாட் செமராங் அருகே விபத்துக்குள்ளானது. பதினொரு பேர் அந்த விபத்தில் சிக்கி இறந்தார்கள்.

ஜூன் 14, 1996: பெல் லாங் ரேஞ்சர் IV ஹெலிகாப்டர் கோலாலம்பூர், ஸ்ரீ டாமன்சாரா தொழில்துறை பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானது, ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 3, 1997: அகுஸ்டா ஏ109இ ஹெலிகாப்டர் பகாங்கின் கோல லிபிஸ் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் DRB-Hicom தலைவர் டான் ஸ்ரீ யாஹ்யா அஹ்மத், அவரது மனைவி புவான் ஸ்ரீ ரோஹனா ஓத்மான் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 19, 1997: இரண்டு Sikorsky S-61A-4 (Nuri) RMAF ஹெலிகாப்டர்கள் சபாவின் சிபிடாங்கில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் இறந்தனர்.

ஜூலை 12, 2004: பெல் 206 லாங் ரேஞ்சர் ஹெலிகாப்டர் சரவாக்கில் உள்ள பாரியோவில் விபத்துக்குள்ளானது. பகெலாலன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஜூட்சன் சகாய் தாகல் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 13, 2007: சிகோர்ஸ்கி S-61A-4 (நூரி) RMAF ஹெலிகாப்டர், பகாங்கின் கெண்ந்திங் செம்பாவில் விபத்துக்குள்ளானது, ஆறு பேர் இறந்தனர்.

ஜூலை 19, 2012: யூரோகாப்டர் EC120 ஹெலிகாப்டர் ஸ்ரீ அமன் சரவாக்கின் சுங்கை லிங்காவில் விழுந்து நொறுங்கியது. மூன்று பேர் இறந்தனர். அதில் ஜெர்மன் விமானி மட்டுமே உயிர் தப்பினார்.

ஏப்ரல் 4, 2015: யூரோகாப்டர் ஏஎஸ்365 ஹெலிகாப்டர் சிலாங்கூரில் உள்ள செமினியில் விபத்துக்குள்ளானது. ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ டாக்டர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் உட்பட ஆறு பேர் அதில் இறப்பெய்தினர்.

மே 5, 2016: யூரோகாப்டர் ஏஎஸ்350 ஹெலிகாப்டர் சரவாக்கின் படாங் லுபாரில் விபத்துக்குள்ளானது. சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோரியா கஸ்னோன், கோலா காங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் முஹம்மது கைரில் அனுவார் வான் அஹ்மத் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 4, 2016: நூரி ஹெலிகாப்டர் ஒன்று சபாவின் தவாவ், எஸ்எம்கே பலோங் அருகே கூரையின் மீது விழுந்தது. அதில் பயணித்த  14 RMAF வீரர்கள் காயமடைந்தனர்.

மார்ச் 24, 2021: ஏர்பஸ் ஏஎஸ்350 பி3 ஹெலிகாப்டர் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த ஐவரும் உயிர் தப்பினர்.

செப்டம்பர் 11, 2022: யூரோகாப்டர் EC120B ஹெலிகாப்டர் ஒன்று பேராக்கின் பிடோருக்கு அருகில் உள்ள ஹுட்டான் சிம்பன் சிக்குஸ் அருகே விபத்துக்குள்ளானது, அதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஏப்ரல் 23, 2024: இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு HOM (M503-3) மற்றும் Fennec (M502-6) ஆகியவை லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் நேவி (RMN) தளத்தின் மீது நடுவானில் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset