நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் சீனாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம்

புத்ராஜெயா:

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் சீனாவுக்கு நாளை தொடங்கி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

வெளியுறவு அமைச்சராகக் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் சந்திப்பு நடத்தவுள்ளார். 

பெய்ஜிங்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் இரு தரப்பு, வட்டார, அனைத்துலக மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விவகாரங்களை இரு தலைவர்களும் விவாதிப்பர் என்று  வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான மேம்பாடுகளை மதிப்பிடுவதற்கான புதிய ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை ஆராய்வதற்கும் இந்தச் சந்திப்பு பெரிதும் துணை புரியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்  உறவு ஏற்பட்டு 50 ஆம் ஆண்டுகள் ஆகிவிட்டன.

கடந்த 2013-ஆம் ஆண்டில் இரு நாடுகளும் வியூக பங்காளிகளாகி 11 ஆண்டுகள் ஆகும் நிலையில் வெளியுறவு அமைச்சரின் இந்தப்  பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.

இந்தப் பயணத்தின் போது சீன கம்யூனிஸ்டு கட்சியின் (சி.சி.பி.) அனைத்துலக துறை அமைச்சர் லியு ஜியான்சோ மற்றும் இதர சி.சி.பி. தலைவர்களுடனும் முஹம்மத் ஹசான் சந்திப்பு நடத்துவார்.

மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீன கடந்த 15 ஆண்டுகளாக விளங்கி வருகிறது. 

இவ்விரு நாடுகளும் இடையிலான மொத்த வர்த்த மதிப்பு 45,084 கோடி வெள்ளியாகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset