நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தான் ஆலயம் எதிர்புறம் உள்ள சாலைக்கு  ஜாலான்  தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டப்படும்: சிவநேசன்

தெலுக் இந்தான்:

தெலுக் இந்தான் ஆலயம் எதிர்புறம் உள்ள சாலைக்கு ஜாலான்  தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டப்படும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் கூறினார்.

நாட்டில் சித்ரா பௌர்னமி  விழா மிகவும் விமர்சியாக கொண்டாட்டப்படும் ஆலயமாக இவ்வாலயம் விளங்கி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஆலயத்தின் எதிர்புறப்  உள்ள ஆலயத்தின் சாலைக்கு ஜாலான் தண்டாயுதபாணி என்று பெயர் சூட்ட நடவடிக்கை எடுப்படும்.

அது  அடுத்தாண்டு நடைமுறைப் படுத்தப்படலாம். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த ஆலய ஊர்வலத்தில்  இரத்தை இழுக்க பாரம்பரிய முறைப்படி காளையை பயன்டுத்த ஊராட்சி மன்றம் அனுமதியை வழங்க வேண்டும் என்று தம்மிடம் ஆலய நிர்வாகம் முன் வைத்த கோரிக்கை குறித்து பேச்சுவாரத்தை நடத்தப்படும் என்றார்.

பேரா மாநிலத்தில் உள்ள ஆலயஙளுக்கு அரசாங்கம் தொடர்ந்து நிதி உதவிகள் வழங்கி வருவதாகவும் அந்த வகையில் ஹிலிர்  பேராக  மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீ நாகமுத்து மாரியம்மிகை   ஆலத்திற்கு 40 ஆயிரம் ரிங்கிட்,  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 30 ஆயிரம் ரிங்கிட்,  ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்திற்கு 30 ஆயிரம் ரிங்கிட்  நிதி வழங்கப்பட்டது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset