நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

தெலுக் இந்தான்:

தெலுக் இந்தானில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

100 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழைமைவாய்ந்த பிரசித்தி பெற்ற இந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தின் இவ்வாண்டும் சித்ரா பௌர்ணமி திருவிழா நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரண்டனர்.

மலேசிய திருநாட்டில் சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஆலயங்களில.  ஒன்றாக இது விளங்குகிறது என்பது  குறிப்பிட்டத்தக்கது.

சித்ரா பௌர்ணமி  திருவிழா அன்று விடியற்காலை 4.30 மணி தொடங்கி ஆலய பால்குடம் எடுத்தல்  வைபவம் நடைபெற்றது.

விடியற்காலை 5.00 மணி தொடங்கி காலை 7.00 மணி வரை சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெறறது. 

பின்னர் காலை 7.30 மணிக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு மகா அபிஷேகம், நண்பகல் 12.01 மணிக்கு மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பிற்பகல் 1.00 மணிக்கு ஆலயத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனிடையே காலை 7.30 மணி தொடங்கி  காவடிகள், பால்குடம்  ஏந்தி  பக்தர்கள்  நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மாலை 4.00 மணியளவில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

பேராவிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகமான பக்தர்கள் அலையென திரண்டு வந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி  சுவாமியை தரிசனம் செய்து சுவாமியின் அருட்கடாட்சத்தை பெற்று சென்றனர்

இவ்விழாவிற்கு பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன், பாசிர் பெர்டமார் சட்டமன்ற உறுப்பினர் ஊ கா லியோங் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset