நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நச்சு உணவால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு; முழு விசாரணை நடத்தப்படும்: கல்வியமைச்சு

புத்ராஜெயா:

கடந்த சனிக்கிழமை கோத்தா பாருவில் உள்ள இடைநிலைப் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் நச்சு உணவை சாப்பிட்டத்தால் பாதிக்கப்பட்டனர்ர்.

இந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சு முழுமையான, விரிவான விசாரணையை நடத்தும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.

அமைச்சு இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்றும் மாணவர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்ளாது.

உணவு நச்சுத்தன்மைக்கான காரணத்தை ஆராய சுகாதார அமைச்சுகத்துடன் இணைந்து மாநிலக் கல்வித் துறையால் பின்தொடர்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக கிளந்தான் மாநில சுகாதாரத் துறையின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின்,

கோத்தா பாருவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 75 மாணவர்களுக்கு உணவு நச்சு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset