நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சில பெட்ரோல் நிலைய நடத்துனர்களுக்குக் கடத்தல் கும்பல்களால் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது: அர்மிசான் அலி 

பெட்டாலிங் ஜெயா: 

தங்களிடமிருந்து மானிய விலையில் டீசலை வாங்க விரும்பும் சில பெட்ரோல் நிலைய நடத்துநர்களுக்குக் கடத்தல் கும்பல்களிடமிருந்து மிரட்டல் வந்துள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்துள்ளார். 

பெட்ரோல் நிலைய நடத்துனர்கள் சிலரும் குண்டர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தனது அமைச்சகம் நேரடியாகவோ அல்லது பெட்ரோல் நிறுவனங்கள் மூலமாகவோ பல அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடத்தல்காரர்களின் செயல்பாடு மிகவும் நுட்பமானது. 

எனவே, தங்கள் தரப்பு காவல்துறை மற்றும் பெட்ரோல் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பது உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  

இந்தப் பிரச்சனை தீவிரமடைவதற்குள் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தனது தரப்பு மேற்கொள்ளும் என்று அர்மிசான் கூறினார். 

பல பெட்ரோல் நிலைய நடத்துனர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு, ஊழியர்கள் மற்றும் வளாகத்தின் பாதுகாப்பிற்கு பயந்து அச்சுறுத்தல்கள் குறித்துப் புகாரளிக்கத் தயங்குவதாகவும் அர்மிசான் தெரிவித்தார். 

எனவே பெட்ரோல் நிலைய நடத்துனர்களுக்கு, டீசலை எல்லைகளுக்குள் கடத்துவதற்காக மானிய விலையில் வாங்க விரும்பும் சிண்டிகேட்களைச் சமாளிக்க வேண்டிய அபாயத்திலிருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

டீசல் கசிவு மற்றும் கடத்தலைத் தடுக்க தனது அமைச்சகம் அமலாக்க நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ளும் என்றார் அர்மிசான்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset