நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடற்படை விமான விபத்து: மாமன்னர் தம்பதி,சிலாங்கூர் சுல்தான்,  பிரதமர் ஆழ்ந்த இரங்கல் 

லுமுட்:

பேராக் மாநிலத்தின் லுமுட்டிலுள்ள அரச மலேசியக் கடற்படைத் தளத்தில் இன்று காலை இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளான விபத்தில் மரணமடைந்த 10 அரச மலேசியக் கடற்படை உறுப்பினர்களுக்கு மாமன்னர் தம்பதி, சிலாங்கூர் சுல்தான், பிரதமர் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

இந்த விமான விபத்தில் உயிரிழந்த மலேசியக் கடற்படை உறுப்பினர்களைப் பிரிந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாக மாமன்னர் தம்பதி தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற மலேசிய ஆயுதப் படை விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் மாமன்னர் தம்பதி தனது பதிவில் தெரிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா விமான விபத்துக் குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த விபத்து மலேசியக் கடற்படைக்கும் நாட்டிற்கும் பெரும் இழப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியக் கடற்படையின் கேப்டனாக இருக்கும் சுல்தான் ஷாராஃபுடின் விமான விபத்தில் உயிரிழந்த உறுப்பினர்களின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் பெரிதும் போற்றுவதாகவும் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

மேலும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த விமான விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். 

விபத்துக்கான காரணத்தை கண்டறியத் தற்காப்பு அமைச்சகம் உடனடி விசாரணை நடத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் தற்போது இந்தக் கடினமான காலத்தை வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

இந்த விபத்து நாட்டிற்கு பெரும் இழப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset