நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளாந்தானில் அதிகமான பிகேஆர் உறுப்பினர்கள்; பாஸ் கட்சிக்குப் பாதிப்பு இல்லை 

கோலாலம்பூர்: 

கிளந்தான் மாநிலத்தில் அதிகமான பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் இருப்பது என்பது அம்மாநில அரசாங்கமான பாஸ் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கிளாந்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாஸ் கட்சிக்கு நேரடி போட்டியை பிகேஆர் கட்சி வழங்குவதாக எதுவும் இல்லை. காரணம், பாஸ் கட்சி கிளந்தான் மாநிலத்தில் வலுவாக உள்ளதாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஸ்மில் தய்யிப் கூறினார். 

கிளாந்தானில் உள்ள வாக்காளர்களைக் கவரும் வகையில் பாஸ் கட்சி பள்ளிவாசல்களில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் பிகேஆர் கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் யாவரும் கிளாந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று பிகேஆர் கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் அறிவித்தார். 

கிளந்தானில் ஒட்டுமொத்தமாக 60,356 பேர் பிகேஆர் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset