நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலைத்தன்மையான அரசியல் காரணமாக  மலேசியா முதன்மை முதலீட்டுத் தளமாக உருவாகியுள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

நிலைத்தன்மையான அரசியல் காரணமாக மலேசியா முதன்மை முதலீட்டுத் தளமாக உருவாகியுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அரசியல் நிலைத் தன்மை, தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக மலேசியா தற்போது சிறந்த முதலீட்டு இடமாக உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

டிஜிட்டல் மாற்றம், தேசிய ஆற்றல் மாற்றம் பாதை வரைபடம் (என்டிஆர்),  புதிய தொழில்துறை திட்டவரைவு (என்ஐஎம்பி) 2030 போன்ற கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு நாட்டின் வலிமையைக் காண உதவுகின்றன என்று அன்வார் கூறினார்.

இப்போது இன்ஃபினியன், என்விடியா போன்ற பல  முதலீடுகளைக் கொண்ட மலேசியா கொண்டுள்ளது.

இத்துறைகளுக்கு 30,000 பொறியாளர்கள் தேவை. ஆனால் அதை அரசால் முழுமையாக நிரப்ப முடியவில்லை.

ஆகவே மலாய் பெற்றோர், பிள்ளைகள் குழந்தைகளின் அறிவியல், கணிதம், திவேட் ஆகிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset