நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெக்குன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஆண்டு இறுதி வரை கால அவகாசம்: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

தெக்குன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஆண்டு இறுதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

தொழில் முனைவர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் இதனை தெரிவித்தார்.

இந்த கால அவகாசம் உண்மையில் கடந்த 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றின் பாதிப்பிலிருந்து தங்களின் வணிகத்தை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டும் தொழில்முனைவோரைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக வணிகர்கள் தினசரி தெக்குன் அலுவலகம் வருவதுண்டு. 

ஆகையால், இவர்கள் கோவிட் பாதிப்பிலிருந்து மீட்சி பெற்று தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்வதற்குக் கால அவகாசத்தை இன்னும் நீட்டிக்க வேண்டியுள்ளது.

தங்களின் பாக்கி தொகையைத் திருப்பிச் செலுத்தாத வர்த்தகர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட ஓர் இலக்கத்திற்குக் கொண்டு வர அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தெக்குன் நோன்பு பெருநாள் விருந்துபசரிப்பில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் இதனை குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset