நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் நலனில் அக்கறை செலுத்தியிருந்தால் அவர்களை எந்த சூழ்நிலையிலும் சந்திக்க முடியும்: பாப்பாராயுடு

கோல குபு பாரு:

மலேசிய இந்து சங்கம் கோலகுபுபாரு வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் கோல குபு பாரு சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட ஆலய நிர்வாக உறுப்பினர்களுடன் சிறப்பு சந்திப்புக் கூட்டம்  நடைப்பெற்றது. 

இதில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு உள்ளூர் ஆலயம், இந்தியர்கள் தேவைகளை கேட்டறிந்தார்.

ஆண்டுதோறும் தமது அலுவலகம் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு இங்குள்ள ஆலயங்களுக்கு மான்யங்களும் அவர்களின் தேவைகள் என்ன என்பதை கண்டறிந்து அதற்குரிய  நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இங்குள்ள இந்து மக்களை நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வட்டார இந்து சங்கத்தை வீ. பாப்பாராயுடு பாராட்டினார். 

மக்கள் நலனில் தேர்தல் காலக்கட்டம் என்றில்லாது எப்பொழுதும் அக்கறையை செலுத்தினால் மக்களை எந்த சூழ்நிலையிலும் எந்த தருணத்திலும் சந்திக்கலாம். 

சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் அரசு வெற்றிக் கொண்டதில் இருந்து மக்கள் நலத் திட்டங்களை மாநில அரசு நாள்தோறும் ஆட்சிக்குழு அலுவலகம் வாயிலாக, மாநில சட்டமன்றங்களின் வாயிலாக, மாவட்ட அரசாங்கம் வாயிலாக மக்களுக்கு இன மதம் பேதமின்றி செயல்பட்டு வருகிறது. 

சிலாங்கூர் மக்களுக்கு மாநில அரசாங்கமான நாங்கள் உற்ற நண்பனாவோம் என்பதையும் தமதுரையில் வீ.பாப்பாராயுடு வலியுறுத்தினார்.

கோல குபு பாரு சுற்றுவட்டாரங்களில் இருந்த 19 ஆலய நிர்வாகங்களை ஒருங்கிணைத்து நல்லதொரு கலந்துரையாடல் வாயிலாக வட்டார இந்து சங்கத்தின் தேவைகளையும் ஆலயங்களின் பரிந்துரைகளையும் முன் வைத்தார் அதன் தலைவர் கலைச்செல்வன் சிங்காரவேலு என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset