நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு தேர்தலில் ஒற்றுமை அரசு வேட்பாளரின் வெற்றிக்கு தேமு உறுப்புக் கட்சிகள் உதவ வேண்டும்: முஹம்மத் ஹசான்

ரந்தாவ்:

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு வேட்பாளரின் வெற்றிக்கு தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் உதவ வேண்டும்.

தேசிய முன்னணி துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

கோலகுபு பாரு இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்து வேட்பாளர் களமிறங்கவுள்ளார்.

இத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.

இதற்கு தேசிய முன்னணி உறுப்பு, நட்புறவு கட்சிகளும் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தர வேண்டும்.

இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு தற்போதைய கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முன்பு வழங்கிய வாக்குறுதியை தேசிய முன்னணி மதிக்கிறது.

அதேவேளையில் இந்தத் தேர்தலில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

ஜசெக தான் வேட்பாளரை களமிறக்க போவது என்பதும் இன்னும் முடிவாகவில்லை.

முன்பு நமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் மீண்டும் உதவ வேண்டும். இது தான் சிறப்பு.

ரந்தாவில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ முகமத் ஹசான் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset