நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒவ்வொரு ரிங்கிட்டுக்கும் கணக்கு காட்ட தயார் மீபாவை மித்ரா ஓரங்கட்டுவது ஏன்?: அன்பானந்தன்

செலயாங்:

நிதிக்காக விண்ணப்பிக்கும் மீபாவை மித்ரா ஓரங்கட்டுவது ஏன்? அதற்கான காரணத்தை மித்ரா தர வேண்டும்.

மீபாவின் தலைவர் கே. அன்பானந்தன் இந்த கேள்வியை முன்வைத்தார்.

கால்பந்து விளையாட்டின் மீதான தாக்கத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என மீபா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டி, பயிற்சி பட்டறைகள், நடுவர் பயிற்சிகள் என பல முயற்சிகளை மீபா மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு திட்டமும் வெற்றியடைய பல நல்லுள்ளங்கள் எங்களுக்கு துணையாக உள்ளனர்.

ஆனால், அரசாங்கம் குறிப்பாக மித்ரா எங்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்வது இல்லை.

பலமுறை விண்ணப்பம் செய்தும் மித்ரா தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மீபாவின் அனைத்தும் வெளிப்படையாக உள்ளது. இருந்தாலும் மித்ரா எங்களை ஓரங்கட்டுவது ஏன் என்று அன்பானந்தன் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கான திட்டங்களை மேற்கொள்வது தான் மித்ராவின் இலக்காக உள்ளது.

அந்த உருமாற்றத்தை தான் மீபா மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கால்பந்துப் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக பெண் மாணவர்கள் சிறப்பாக கால்பந்து விளையாடுகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் அரங்கத்தில் திரள்கிறார்கள்.

திறமையான மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இது தான் உருமாற்றம். இந்த உருமாற்றம் ஏன் அரசாங்கத்திற்கும் மித்ராவுக்கும் தெரியவில்லை என்று புரியவில்லை.

மீபா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அனைவரும் கண் திறந்து பார்க்க வேண்டும்.

ஒருவேளை நிதி வழங்கப்பட்டால் கிடைக்கும் ஒவ்வொரு ரிங்கிட்டும் முறையாகக் கணக்கு காட்ட மீபா தயார் என்று அதன் துணைத் தலைவர் ஏஎஸ்பி ராஜன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset