நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆதரவு அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

தமக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தொகுதிகளுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிபந்தனை விதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலைத்தன்மை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதில் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகள் வசமுள்ள தொகுதிகளுக்குத் தேவையான நிதியை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தின் உச்சத் தலைமைத்துவ மன்றம் இணங்கியிருப்பதாக துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோப் தெரிவித்தார்.

இதுகுறித்து புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு கூடுதல் கலந்துரையாடல்களுக்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

உச்சத் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்துக்கு பிரதமர் அன்வார் தலைமை தாங்கினார். 

அதில் எதிர்க்கட்சிகள் வசம் உள்ள தொகுதிகளுக்குத் தேவையான நிதியை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset