நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிறப்பு மானியம்; தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது: சரவணக்குமார்

நீலாய்:

உலு சிலாங்கூர் கோல குபு பாருவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிறப்பு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் கூறினார்.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அண்மையில் இந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 5.2 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்தார்.

மக்கள் பயன்பெறும் நோக்கில் இந்த சிறப்பு மானியத்தை அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

கோல குபு பாரு சட்டமன்றத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நேரத்தில் நிதி அறிவிக்கப்பட்டது தான் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சரின் இந்த நடவடிக்கை தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை வளைத்து அவர்களின் ஆதரவை வாங்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

தேர்தல்களில் நியாயமான அரசியல் போட்டி என்ற கொள்கைக்கு முரணான இந்த நெறிமுறையற்ற நடைமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset