நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், துன் ஹாஜி முஹம்மது ஹனிஃப் காலமானார்

கோலாலம்பூர்:

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், துன் ஹாஜி முஹம்மது ஹனிஃப் பின் உமர் இன்று அதிகாலை 2.15 மணியளவில், (20 ஏப்ரல் 2024 சனிக்கிழமை.) காலமானார்.

இதனை அவரது மகன் அப்துல் ரஹ்மத் உமர் பின் முஹம்மது ஹனிஃப் உறுதிப்படுத்தினார்.

துன் முஹம்மது ஹனிஃப் பின் ஒமர்  ஜனவரி 16, 1939ஆம் ஆண்டு பிறந்தார். 

மலேசியாவின் நான்காவது காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். மேலும் 20 ஆண்டுகளாக மலேசியாவில் நீண்ட காலம் பணியாற்றிய காவல்துறைத் தலைவர் ஆவார். 

பேராக் மாநிலத்தில் உள்ள தெலுக் இந்தானில் பிறந்த ஹனிஃப் உமர், செப்டம்பர் 7, 1970 இல் மலக்கா காவல்துறைத் தலைவராகவும், டிசம்பர் 6, 1971 இல் சிலாங்கூர் காவல்துறைத் தலைவராகவும் ஆனார். 

பிப்ரவரி 1, 1973 இல் அவர் மலேசியக் காவல்துறை துணைத் தலைவரானார். அடுத்த ஆண்டு அவர் (1974) அவர் நாட்டின் காவல்துறைத் தலைவரானார்.

ஓய்வு பெற்ற பிறகும் அவர் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டார். 

துன் ஹனிஃப் உமர் மலேசிய அமைதி அறக்கட்டளையின் புரவலர் ஆவார்.

நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பெரும் பங்காற்றியவர் துன் ஹனீஃப் என்று பல்வேறு தலைவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset