நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை டத்தோஶ்ரீ சரவணன் தொடக்கி வைப்பார்: டத்தோ மோகன் நிறைவு செய்து வைப்பார்

கோலாலம்பூர்:

ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார்.

மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் போட்டியை நிறைவு செய்து வைக்கவுள்ளார் என்று 2020 கால்பந்து கிளப்பின் தலைவர் ஏஎஸ்பி ராஜன் கூறினார்.

இரண்டாவது ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டி மலேசியா ஏற்று நடத்துகிறது.

இப்போட்டி வரும் ஏப்ரல் 21, 22ஆம் தேதிகளில் சிரம்பான் பண்டார் ஶ்ரீ  செண்டாயான் ஐஆர்சி அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் இருந்து 4 அணிகள், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 1 அணிகளும் கலந்துக் கொள்ளவுள்ளது.

மலேசியாவை பிரதிநிதித்து 2020 கிளப் என மொத்தம் 7 அணிகள் கலந்துக் கொள்ளவுள்ளன என்று ஏஎஸ்பி ராஜன் கூறினார்.

இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற பல நிறுவங்கள், நல்லுள்ளங்கள் முழு ஆதரவை வழங்கி வருகின்றன.

குறிப்பாக டத்தோஶ்ரீ சரவணனும் டத்தோ மோகனும் இப்போட்டிக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்துள்ளனர்.

இவ்வேளையில் ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி.

மேலும் இப்போட்டியை காண கால்பந்து ஆர்வலர்கள் திரளாக அரங்கிற்கு வர வேண்டும் என்று ஏஎஸ்பி ராஜன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset