நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜானா விபாவா திட்ட தொடர்பான மறுஆய்வு மனுவை 5 நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்: மொஹைதின்

கோலாலம்பூர்:

ஜானா விபாவா திட்டத்தின் அதிகார துஷ்பிரயோக வழக்கில் விடுதலை முடிவை திரும்பப் பெறுவதற்கான தனது மறுஆய்வு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் வழக்கு நிர்வாகத்தின் போது முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொஹைதீனின் வழக்கறிஞர் குழு அந்த விருப்பத்தை சுட்டிக்காட்டியது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிமுக்கு கடிதம் எழுதுமாறு மொஹைதினின் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கூறியது.

மேலும் மறுஆய்வு மனுவை ஜூலை 9ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் மொஹைதினுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய விடுதலை முடிவை ரத்து செய்தது.

மேலும் அவருக்கு எதிரான நான்கு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை மீண்டும் நிறுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset