நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதர்களை நாய்களுடன் ஒப்பிடுவது பாவம் - விரிவுரையாளர்

கோலாலம்பூர்:

மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும் மனிதர்களை அவமதிப்பதையோ அல்லது விலங்குகளுடன் ஒப்பிடுவதையோ இஸ்லாம் தடை செய்கிறது.

யூஐஏஎம்மின் அல் குர்ஆன், சுன்னா ஆய்வுத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் அபு ஹாபிஸ் சாலே ஹுடின் இதனை கூறினார்.

மெக்டோனால்ட் துரித உணவுப் பொருட்களை உண்ணும் முஸ்லிம்களை நாய்களுக்கு ஒப்பிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பில் பேசிய அவர்  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடாதவர்களை நாய்கள் என குறிப்பிடுவது அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

குறிப்பாக இதுவொரு பாவமான செயலாகும்.

காரணம் அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் சக முஸ்லிம்களை இழிவுபடுத்துவது தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு குறித்த கருத்து வேறுபாடுகள் ஒரு பிரச்சனையல்ல. அதனால் சமூகத்தின் சக உறுப்பினர்களை சபிக்க கூடாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset