நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்

ஷாஆலம்:

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஷாஆலம் ஐடியல் மாநாட்டு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 1,500 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 250  பேராளர்களும் அடங்குவர்.

டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை மலேசியா ஏற்று நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.

டாக்டர் அம்பேத்கரின் பேரன் பீமாராவ் அம்பேத்கர் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர் ஆவார்.

டாக்டர் அம்பேத்கர் மாநாட்டின் புரவலர் ஓம்ஸ் தியாகராஜன், மனிதவள அமைச்சர் ஸ்டீவம் சிம், சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன், மலேசியாவுக்கான இந்திய தூதர் பி. என். ரெட்டி , மலேசிய அம்பேத்கர் இயக்கத்தின் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset