நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தின் பல உதவித் திட்டங்களை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை; பிரபாகரனுடன் இணைந்து பணியாற்ற தயார்: டத்தோ ரமணன்

சுங்கைபூலோ:

அரசாங்கத்தின் பல உதவித் திட்டங்களை இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில்லை.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.

எனது அமைச்சின் கீழ் பல இலாகாக்கள் உள்ளன. அந்த இலாகாக்களின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு என நிதிகள் ஒதுக்கப்படுகிறது.

குறிப்பாக தெக்குனில் 30 மில்லியன், அமானா இக்தியார் 60 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் அமானா இக்தியாதின் பெண் கடனுதவித் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

நாடு முழுவதும் 124 அமானா இக்தியார் அலுவலகங்கள் உள்ளன. அங்கு அடையாள அட்டையை மட்டும் எடுத்து சென்றால் போதும்.

மற்ற விஷயங்களை அங்குள்ள அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று டத்தோ ரமணன் கூறினார்.

இதை தவிர்த்து எஸ்எம்இ கோர்ப்பிலும் நிதி திட்டங்கள் உள்ளன.

குறிப்பாக வர்த்தகத்திற்கு 5 லட்சம் ரிங்கிட் முதலீடு செய்தால் எஸ்எம்இ இன்னொரு 5 லட்சம் ரிங்கிட்டை நிதியாக வழங்கும்.

இந்த நிதி திட்டத்திற்கு பெரும்பாலான இந்தியர்கள் விண்ணப்பம் செய்வது இல்லை.

இதனால் அந்நிதி நம் சமுதாயத்திற்கு பயன்படாமல் போகிறது.

இப்படி அரசாங்கத்தின் உதவிகள் கிடைப்பது  இல்லை என்று சொல்லாமல் உள்ள வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதை சமூக மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

மித்ராவின் நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்.

குறிப்பாக அவர் ஏதும் ஆலோசனைகளை கேட்டால் அதை வழங்கவும் நான் தயார்.

சுங்கைபூலோவில்  நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின் டத்தோ ரமணன் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset