நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவின் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய மாமன்னர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் சீனாவின் ஆக விலையுயர்ந்த ஹோங்சி எல்5 சொகுசு காரை வாங்கியுள்ளார்.

தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய அந்த வகை கார் சீனாவின் அதிகாரபூர்வ தேசிய கார்.

மேலும் சீன அதிபர் ஸி ஜின்பிங் பயன்படுத்தும் கார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

எஃப்ஏடபிள்யூ குழுமம் தயாரிக்கும் அந்த காரின் விலை ஐந்து மில்லியன் யுவான் ஆகும்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மலேசியாவுக்கான சீனத் தூதர் ஓயுவாங் யுஜிங்குடனான சந்திப்பில் தமது புதிய காரின் படங்களை மாமன்னர் வெளியிட்டார்.

மேலும் ஹோங்சி எல்5 காரைத் தனிப்பட்ட முறையில் வாங்கிய உலகின் முதல் உரிமையாளர் மாமன்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset