நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஃபாவில் மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் மீது  இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்

புத்ராஜெயா:

கடந்த வெள்ளிக்கிழமை ரஃபாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திய மிருகத்தனமான தாக்குதலை மலேசியா கடுமையாகக் கண்டிக்கிறது.

இது மனிதாபிமான உதவி விநியோகத் பணியில் இருந்த பல தன்னார்வலர்கள், பணியாளர்களை வெளிப்படையாகத் தாக்கி காயப்படுத்தியது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஓப்ஸ் இஹ்சான் மூலம் மலேசியாவில் இருந்து உதவிகளைக் கையாளும் நபர்கள் அடங்குவர்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உதவி வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் நபர்கள் மீதான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இஸ்ரேலின் இந்த அட்டூழியம் மிகப்பெரும் கொடுமையை பிரதிபலிக்கிறது.

இந்த கொடுங்கோன்மை செயலை  கண்டித்தால் மட்டும் போதாது.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று விஸ்மா புத்ரா கூறியது. 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset