நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி இணைய முதலீட்டால் 1.06 மில்லியன் ஓய்வூதியப் பணத்தை இழந்த முதியவர்

ஜொகூர் பாரு:

பொதுப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற முதியவர் கடந்த மாதம் இல்லாத இணைய முதலீட்டு மோசடியால் 1.06 மில்லியன் மதிக்கத்தக்க தனது ஓய்வூதியப் பணத்தை இழந்துள்ளார். 

61 வயதான பாதிக்கப்பட்ட முதியவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் முகநூலில் முதலீட்டு தொடர்பான விளம்பரத்தைக் கண்ட பின் அதில் குறிப்பிட்டிள்ள 
வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொடர்பு கொண்டிருப்பது கண்டறியப்பட்டுதை ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் எம்.குமார் தெரிவித்துள்ளார். 

போலி முதலீட்டு தொடர்பாக ஆடவர் முதியவரை தொடர்பு கொண்டு அதில் ஈடுப்படுமாறு கூறியுள்ளார். 

இந்த மூதலீட்டின் மூலம் மொத்த தொகையில் ஐந்து முதல் எட்டு விழுக்காடு வரை லாபம் கிடைக்குமென்றும் அப்பணம் அதே நாளில் பரிமாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆடவரின் வார்த்தைகளை நம்பிய முதியவர் தனது ஓய்வூதியப் பணத்தை மூதலீட்டுக்கான வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் என்று எம்.குமார் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் முதலீடு சம்பந்தப்பட்ட முதலீட்டு பயன்பாட்டில் காட்டப்படும் லாபத்தை ஈட்டுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக லாபத்தை திரும்பப் பெறத் தவறியதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அம்முதியவர் மார்ச் 22-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்க முன் வந்தார் என்று அவர் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தடியடி மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. 

சமூக ஊடகங்களில் விரைவான மற்றும் லாபகரமான வருமானத்தை உறுதியளிக்கும் முதலீட்டு சலுகைகளை எளிதில் நம்பாமல் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை காவல்துறை அறிவுறுத்துகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset