நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெட்டா, டிக்டாக் குழந்தைகளுக்கான இணைய பாதுகாப்பு குறித்து ஒத்துழைப்பு வழங்கும்: ஃபஹ்மி ஃபட்சில்

கோலாலம்பூர்: 

மெட்டா மற்றும் டிக்டாக் ஆகியவை 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பு குறித்து ஒத்துழைப்பு வழங்கும்.

இணைய சூதாட்டம், மோசடிகள், போலிச் செய்திகள் மற்றும் 3R (இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்) போன்ற குற்றவியல் உள்ளடக்கங்களைக் கண்காணிப்பது தொடர்பாக நேற்று
நடந்த விவாதத்தில் இந்த உடன்பாடு எட்டப் பட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்  தெரிவித்தார்.

மேலும், மலேசியாவில் சமூக ஊடக தளங்களின் சட்டங்கள் மற்றும் இயக்க வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் இரு தளங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. 

அனைவருக்கும் இணையத்தின் உற்பத்தி, இணக்கமான மற்றும் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்யும் அதே வேளையில், மலேசியர்களின் பேச்சு உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் மடாணி அரசாங்கத்தின் உறுதிப் பாட்டிற்கு இணங்கும் வகையில் இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். 

முன்னதாக, ஃபஹ்மி தகவல் தொடர்பு அமைச்சகம், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் பல நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விவாதிக்க மெட்டாவுடன் ஒரு சந்திப்பை நடத்தும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset