நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பந்திங், கிள்ளான் பகுதிகளில் காற்று தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கோலாலம்பூர்: 

பந்திங், கிள்ளான் பகுதிகளில் காற்று தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டது. இன்று காலை 8 மணி தொடங்கி காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது. 

காற்று மாசு நிர்வகிப்பு தரவுகளின் படி பந்திங்கில் API குறியீடு 163ஆகவும் கிள்ளான் 135ஆகவும் பதிவு செய்யப்பட்டது. 

நாட்டிலுள்ள 48 பகுதிகளிலும் API குறியீடு 51 முதல் 100 வரை உள்ளதாக கூறப்படும் நிலையில் புத்ராஜெயா, செராஸ் பகுதிகளில் முறையே 95,96 API குறியீடுகள் பதிவு செய்யப்பட்டது. 

0 முதல் 50 என்பது ஆரோக்கியமானதாகவும் 50 முதல் 100 வரை மிதமான காற்று தரம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset