நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 பாதிப்புகள் குறைந்துள்ளன: இருப்பினும் பெருநாள் காலத்தின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கோலாலம்பூர்:

கோவிட்-19 பாதிப்புகள் குறைந்துள்ளன. இருந்தாலும் பெருநாள் காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் முஹம்மத் ராட்ஸி இதனை தெரிவித்தார்.

கடந்த மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரையிலான 14ஆவது தொற்று நோய் வாரத்தில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 97.1% குறைந்து 493 பாதிப்புகளாக உள்ளது, 

இது முதல் காலாண்டில்  17,256 நோயாளிகளுடன் ஒப்பிடும்போது மிக குறைவு.

அதே போன்று கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையும் 32இல் இருந்து 95.5% குறைந்துள்ளது.

ஆகவே 2024 இன் தொற்று நோய் வாரம் 1 முதல் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

கோவிட் -19 இன் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையில் அவர் கூறினார்.

பாத்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset