நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸம்ரி வினோத் இந்து சமயத்தைப் பற்றி பேச நிரந்தர தடை: ஏப்ரல் 15இல் விசாரணை

கோலாலம்பூர்: 

ஸம்ரி வினோத் இனி இந்து சமயத்தைப் பற்றி எந்த இடத்திலும் எவரிடத்திலும் பேசக் கூடாதென்று மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி ஷாஆலம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

கூட்டரசு அரசியல் சாசன சட்டம் 11ஆவது பிரிவு உட்பிரிவு 5ஐ ஸம்ரி வினோத் மதிக்காமல் செயல்படுவது.

அதை மீறி கருத்து கூறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஸம்ரி வினோத் ஏற்பாடு செய்த செய்தியாளர்க் கூட்டத்திற்கு தடை விதிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் இதில் அடங்கும்.

இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் அந்தக் கூட்டம் தொடங்கி விட்டதால், அதன்போக்கில் அனுமதிக்கப்பட்டது.

தவிர, பண்டிகைக் கால விடுமுறையும் வந்து விட்டதால் அடுத்தடுத்த நாட்களில் உடனடி விசாரணைக்கு வரமுடியாத நிலையில் அடுத்த வாரம் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று ஷாஆலம் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்ததாக, இந்து சங்க வழக்கறிஞர் ஆர். தயாளன் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதன் நகல் ஸம்ரி விநோத்திடம் சார்வு செய்யப்பட உள்ளது என்றும் ஆர்.தயாளன் மேலும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset