நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து காதலி கொலை: லாரி ஓட்டுநர் மீதான வழக்கை ஏப்ரல் 19-ஆம் தேதி குறிப்பிட நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர்:

ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இவ்வாண்டு பிப்ரவரியில் செத்தியா ஆலாமிலுள்ள தங்கும் விடுதியின் 23-ஆவது மாடியிலிருந்து தள்ளிவிட்டு தனது தாய்லாந்து காதலியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநருக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி புதிய வழக்கு குறிப்பிடும் தேதியாக நிர்ணயித்தது.

37 வயதான வி.நாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவஞானந்தன் ராகவா, இந்த வழக்கு குறித்த தேதி காலை 9 மணிக்கு முஹம்மத் ரெட்ஸா அசார் ரெசாலி முன்னிலையில் குறிப்பிடப்படும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, நீதிமன்றம் ஜூன் 7-ஆம் தேதியை வழக்கைக் குறிப்பிடுவதற்கு நிர்ணயித்தது.

இருப்பினும், வழக்கில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டதால் புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டது.

பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு 10.02 மணிக்கு, செத்தியா ஆலாமிலுள்ள ஓர் தங்கும் விடுதியிலிருந்து 32 வயதான மாவிகா லும்மையைத் தள்ளி விட்டுக் கொன்றதாக நாதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset